Friday, 3 June 2011

தொழில்நுட்பச் செய்திகள் காற்றில் இயங்கும் காரை கண்டுபிடித்து மாணவர்கள் சாதனை

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் காற்றில் இயங்கும் காரை இந்தியாவில் உள்ள தமிழக கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெட்ரோல் விலை உயர்வு, அதிக விலை, சுற்றுச்சூழல் மாசுபடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த காரை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
இதுகுறித்து மாணவன் மதன்குமார் கூறியதாவது: நானும், என்னுடன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படிக்கும் என் சக நண்பர்கள் ஆகிய 4 பேரும் படிப்பால் நமது வாழ்க்கை தரம் உயருவது மட்டுமின்றி, இந்த சமுதாயத்துக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம். இன்று உலகம் முழுவதிலும் மக்களை பெரிதும் பாதித்து வருவது சுற்றுச்சூழல் மாசுபாடு தான். மாசுபாட்டை குறைக்க நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
 
இதற்காக காற்றில் இயங்கும் காரை மிகக் குறைந்த விலையில் தயாரிப்பதற்கான முயற்சியை கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் தொடங்கினோம். இதற்கு கல்லூரி பேராசிரியர் மிகவும் உறுதுணையாக இருந்தார். 3 மாதம் இடைவிடாத முயற்சியின் காரணமாக ரூ.35,000 செலவில் ஒருவர் மட்டும் அமர்ந்து செல்லும் விதத்தில் ஒரு காரை வடிவமைத்தோம். இந்த காரில் 300 பவுண்ட் காற்று கொள்ளளவு கொண்ட பெரிய டேங்க் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும்.
 
அதில் இருந்து அழுத்தத்துடன் வெளியேறும் காற்று இன்ஜினை இயக்கும். வழக்கமான கார்களைப் போன்றே இதில் கியர், கிளட்ச், பிரேக் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. இதில் இருந்து புகை வராது. எனவே சுற்றுச்சூழலும் மாசுபடாது. நாம் செல்லும் வழியில் எங்காவது காரை நிறுத்தி காரின் டேங்கில் காற்றை நிரப்பிக் கொண்டு நம் பயணத்தை தொடரலாம். இவ்வாறு மதன்குமார் கூறினார்.


பேசினால் போதும்: தானாகவே சார்ஜ் ஏறும் கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு

பேசினாலே பற்றரியில் சார்ஜ் ஏறும் புதிய வகையான கைத்தொலைபேசிகளை தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய தொழிநுட்பத்தின்படி ஒருவர் பேசும் ஒலி எலக்ட்ரிக் பவராக மாறி கைத்தொலைபேசியின் பற்றரியில் சார்ஜ் ஏற்றப்படுகிறது. மேலும் கைத்தொலைபேசியில் பேசுபவரை சுற்றி கேட்கும் சப்தம், இசை உள்ளிட்டவைகளின் ஒலியாலும் இவ்வகையான தொலைபேசியில் சார்ஜ் ஏற்றலாம்.
 
சியோல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான சாங் வூகிம் என்பவர் இத்தக‌ைய கைத்தொலைபேசியை கண்டுபிடித்திருப்பதாக தி சன்டே டெலிகிராப் என்னும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மின்சாரம் இன்றி சுற்றுப்புறத்தில் உள்ள ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி கைத்தொலைபேசியின் பற்றரியில் சார்ஜ் ஏற்றப்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
கைத்தொலைபேசி பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் சத்தம் நிறைந்த இடங்களில் வைக்கப்படும் இத்தகைய கைத்தொலைபேசிகள் தானாக சார்ஜ் ஏற்றப்படுகின்றன.

உளவு பார்க்கும் ரகசிய ரோபோ கமெரா

வானத்தில் பறந்த படியே ஆயிரம் அடி தொலைவில் இருந்து தெள்ளத் தெளிவாக படம் எடுக்கக் கூடிய ரோபோ கமெராவை கனடாவை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. கனடாவை சேர்ந்த நிறுவனம் ஏரியன் லேப்ஸ். உளவு நிறுவனங்களுக்கு தேவையான எலக்ட்ரானிக் கருவிகளை தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் உருவாக்கியிருப்பது “ஏரியன் ஸ்கவுட்” எனப்படும் ரோபோ கமெரா.
 
இதில் உள்ள தொடுதிறன் திரையின் மூலம் முதலில் கூகுள் நிறுவனத்தின் உலக வரைபட மென்பொருள் மூலமாக நமக்கு வேண்டிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும். robo camera உதாரணமாக நியூயார்க் என்று தேர்வு செய்தால் ஏரியன் ஸ்கவுட் உடனே புறப்பட்டு நியூயார்க் நோக்கி பறக்கத் தொடங்கும். அங்கு சென்றதும் 500 அடி உயரத்தில் பறந்தபடியே கீழே நடப்பவற்றை தனது டிஜிட்டல் கமெராவில் புகைப்படமாக அல்லது வீடியோ காட்சியாக தொடர்ச்சியாக பதிவு செய்யும். கீழே இருந்து பார்த்தால் ரோபோவை கண்டுபிடிக்க முடியாது.
 
சுமார் ஆயிரம் அடி தொலைவில் இருந்துகூட தெள்ளத் தெளிவான படங்களை எடுக்கும். பதிவாகும் காட்சிகளை மின்னஞ்சலுக்கோ, ஐபோனுக்கோ அனுப்பிக் கொண்டே இருக்கும். இதன் விலை ரூ.22 லட்சம். காரில் மிக வேகமாக செல்பவரின் முகத்தைக்கூட இக்கமெரா தெளிவாக படம் பிடிக்கும். தப்பிச் செல்லும் கொள்ளையரை பிடிக்கவும், மறைந்திருக்கும் குற்றவாளிகளை பிடிக்கவும் இது உதவிகரமாக இருக்கும் என்கிறது ஏரியன் லேப்ஸ் நிறுவனம்.
 

சூரிய கலம் மூலம் இயங்கும் முதல் சர்வதேச விமானம்!

சூரிய சக்தி முலம் இயங்கும் முதலாவது சர்வதேச விமானம் தனது பயணத்தை மே 13 அன்று ஆரம்பித்து வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. விமானம் தனது பயணத்தை சுவிஸ்லாந்தின் PAYERNE விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் LUXEMBOURG ஆகிய நாடுகளுக்கு மேலாக 12400 அடி உயரத்தில் 12 மணி 59 நிமிடங்கள் பறந்து பெல்ஜியத்தின் BRUSSELS விமான நிலையத்தில் தரையிறங்கியது. 200 அடி நீளமான இந்த விமானத்தில் 12000 சூரிய கலங்கள் பொருத்தப்பட்டு விமானத்துக்கு தேவையான சக்தி வழங்கப்பட்டது.
 
இதில் பொருத்தப்பட்டுள்ள சூரிய கலங்களில் சேமிக்கப்படும் சக்க்தியைக்கொண்டு இந்த விமானம் 26 மணித்தியாலங்கள் பறக்கும் வல்லமை கொண்டது. இந்த விமானத்தின் வேகம் மணிக்கு 50KM /H இதனது வேகத்தை அதிகரிக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விமானம் சுவிஸ்லாந்தின் தயாரிப்பு என்பதுடன் இதற்காக 88 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
 

தொழில்நுட்பச் செய்திகள் பூமியின் உட்பகுதியில் நிகழும் மாற்றங்கள்

மனிதர்களின் செயற்பாடுகளால் பூமிப்பந்தின் உள்பகுதி உருகத்தொடங்கி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பு, ஓசோன் ஓட்டை ஆகியவற்றால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பூமியின் உள்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செபாஸ்டியன் ரோஸ் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தினர். சுற்றுச்சூழல் மாசுபாட்டால் நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் அதிகரித்து வருகிறது.
 
இதுமட்டுமின்றி பூமியின் ஆழ்மைய பகுதியும் உருகத்தொடங்கி உள்ளது. பூமியின் இயக்கத்துக்கு தேவையான மின்காந்த அலைகள் இப்பகுதியில் இருந்து தான் கிடைக்கிறது. இதன் விட்டம் சுமார் 2,400 அடி. நிலா அளவுக்கு பெரிதானது. இது மிக மிக கடினமானது. இப்பகுதியை சுற்றி வெளிப்புறம் இரும்பு, நிக்கல், அலாய் உள்ளிட்ட பிசுபிசுப்பான ஒட்டும் தன்மையுள்ள, பிரகாசமான போர்வை போன்ற உலோகக்கலவை திரவ நிலையில் உள்ளது.
 
இயல்பு நிலை பாதிக்கப்படாமல் இப்பகுதியில் கன்வெக்ஷன் முறையில் வெப்பம் மற்றும் குளிர்தல் நிகழ்வு மாறிமாறி நடைபெறும். சீரான கன்வெக்ஷன் பூமி சுழற்சியை பாதிக்காது. இடர்பாடுகளால் கன்வெக்ஷன் முறையில் ஏற்படும் பாதிப்பு இப்பகுதியில் வெப்பத்தை அதிகரித்து பாதிப்படையச் செய்யும். இதனால் அங்கிருந்து வரும் மின்காந்த அலைகள் பாதிக்கப்பட்டு பூமி சுழற்சி உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலமாக மட்டுமே இந்த பாதிப்பை சரிசெய்ய முடியும்.
 

கடலில் இறங்கிய விமானத்தை நேரடியாகப் பார்த்தது உண்டா ?

விமானத்தில் நாம் பயணிக்கும் போது, விமானம் தற்செயலாக கடலில் இறங்க நேரிட்டால் நாம் என்ன செய்யவேண்டும் என விமானப் பணியாளர் எமக்கு செய்முறைகளைச் செய்து காட்டுவது உண்டு. ஆனால் அதனை நாம் பார்ப்பதே இல்லை. ஆனால் இங்கே பாருங்கள், ஒரு விமானம் கோளாறு காரணமாக அவசரமாக கடலில் மிகவும் நேர்த்தியாக தரையிறக்கப்படுகிறது. விமானி அனைத்துப் பயணிகளையும் பேரழிவில் இருந்து காப்பாற்றியுள்ளார்.